சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீஹார் செல்ல கேரளாவில் உள்ள மாஹே ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்கலுக்கு உதவிய சென்னை த.மு.மு.க.வினர் .
பீஹார் செல்ல சென்னை வந்த மாஹே நவோதயா பள்ளி பொறுப்பு ஆசிரியர்கள் கிரிஸன், அஞ்சு மற்றும் மாணவிகள் 8 எட்டு பேர் மாணவர்கள் 15 பேர் மொத்தம் 25 இருபத்தி ஐந்து பேரும் கொரோனா பாதிப்பை தடுக்க செயல்படுத்திய ஊரடங்கு உத்தரவை அடுத்து அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டதால் என்ன செய்வது என்று வழி தெரியாமல் தவித்தனர். தகவல் அறிந்த த.மு.மு.க மத்திய சென்னை மாவட்ட துறைமுகம் பகுதி தலைவர் ஷா ஹசல் மற்றும் வட சென்னை மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் உடனடியாக பஸ் ஏற்பாடு செய்து புதுச்சேரியில் உள்ள ஜவஹர் நவோதயா பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் . இவர்கள் அனைவரையும் மூத்த உறுப்பினர் எம்.பஷீர் அஹம்மது தலைமையில் புதுச்சேரி மாவட்ட தலைவர் என்.எம்.எஸ். சகாபுதீன் த.மு.மு.க செயலாளர் எம். நூர் முஹம்மது ம.ம.க.செயலாளர் மன்சூர், பொருளாலர் அலாவுதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வில்லியனூர் நகரத் தலைவர் அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் புதுச்சேரி ஜவஹர் நவோதயா பள்ளிவாயலில் வரவேற்றனர் .